அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டத்திற்கு நிதி கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு, அவருடைய குடும்பத்தினர்களுக்கு, வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு அன்னதான திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நன்கொடை அளிக்கும் படி அறநிலையத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மூலமாக அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருக்கோயில்கள் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த உன்னதமான அன்னதானத்திட்டத்தினைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுவதால் அன்னதானத்திட்டத்திற்குத் தாராளமாக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதலை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வசதி குறித்த விவரம் பின்வருமாறு,
1. அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தை (hrce.tn.gov.in) பார்வையிட்டு அதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் "நன்கொடை" என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்தவுடன் பொது நன்கொடை, அன்னதானம் நன்கொடை மற்றும் திருப்பணி நன்கொடை என்ற மூன்று திட்டங்கள் இணையதளத்தில் தோன்றும்.
2. அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் "அன்னதானம் நன்கொடை" என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது முதற்கட்டமாக 57 திருக்கோயில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் அத்திருக்கோயில்களில் எந்தத் திருக்கோயிலுக்குத் தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த திருக்கோயிலைத் தேர்வு செய்ய வேண்டும்.