தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பாக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். சிறுபான்மையினரின் சார்பாக பா.ஜ.க-வில் கட்சிப்பணி, அரசியல் பிரச்சாரம் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் வேலூர் இப்ராஹிம்.
அவர் தற்போது பா.ஜ.க. வின் அகில இந்திய மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவர் முருகன் இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நியமனத்தை தொடர்ந்து அண்ணாமலை ஐ.பி.எஸ், இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார், அவரது ட்விட்டர் பதிவில் கூறுகையில் "அனைத்து சமுதாய நல்லிணக்கம் பற்றி பேசி வரும் வேலூர் இப்ராஹிம் அவர்கள் பா.ஜ.க-வின் அகில இந்திய மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா மதத்தினரின் சகோதரத்துவம் ஒங்க அவர் செயல்பாடு இருக்கும், நிச்சயம் அவர் செய்து காட்டுவார்." என்று அதில் அண்ணாமலை தனது வாழ்த்தை தெரிவித்தார்.
Delighted that Shri @VelloreIbrahim is appointed as the secretary for All India Minority wing of @BJP4India. He will represent his people well by removing all falsehoods against our party & take our party's principles' to all sections. @BJP4TamilNadu @Murugan_TNBJP @CTRavi_BJP
— K.Annamalai (@annamalai_k) May 31, 2021
அதே போல கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க-வின் அகில இந்திய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசனும் வேலூர் இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations and wish you all the best. Let us work towards constructive development of the Nation!
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 31, 2021
இதே போல பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.