கருப்பு பூஞ்சைக்கான மருந்தை அதிகரிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்..!
தற்போது தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் வரும் பாதிப்பு அதிகமாகி இருக்கும் நிலையில். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த நோயின் பாதிப்பால் தவிக்கும் மக்களுக்கு உதவ வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அதில் அவர் கூறுகையில் "எனது கோரிக்கைகளை ஏற்று தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் ஆகியவற்றை அதிகப்படுத்தியதற்கு மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தற்போது தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு அதிகளவில் பரவி வரும் சூழலில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி IV மருந்து ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவிடுமாறு வேண்டுகிறேன்" என்று இ.பி.எஸ் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். தற்போது தமிழ்நாட்டில் பலர் கருப்பு பூஞ்சை நோயால் தவித்து வரும் நிலையில் இ.பி.எஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்கனவே ஏற்று தமிழகத்திற்கு தேவையான விநியோகத்தை அதிகப்படுத்தியது போல், மோடி அவர்கள் இந்த கோரிக்கையும் ஏற்பார் என்று மக்கள் நம்புகிகாரகள்.