"கொரோனோ இரண்டாம் அலைக்கு அ.தி.மு.க அரசே காரணம்" - சமாளிக்க முடியாமல் கைவிரிக்கும் முதல்வர் ஸ்டாலின்?

Update: 2021-06-01 04:30 GMT

கொரோனோ இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் நிலைமை கைமீறி போனதால் கடந்த கால அ.தி.மு.க ஆட்சியின் மீது பழி போட துவங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று கொரோனோ தொடர்பாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?, கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள்மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும்" .என கொரோனோ விழிப்புணர்வை பற்றி பேசினார்.

பின்னர் அவர், "முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த இரண்டாவது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும், நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள் தான் ஆகி இருக்கின்றன. எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்யப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் இந்த கொரோனா தடுப்புச் சுவரை நாம் விரைவில் உடைத்து நொறுக்கியாக வேண்டும். அதன் பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை நாம் உருவாக்க வேண்டும்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தி ஒரு மாத காலம் ஆன நிலையிலும் இன்னும் தமிழகம் இந்திய அளவில் கொரோனோ தொற்றில் முதலில் இருக்கிறது. நிலைமை கைமீறி சென்றதால் தி.மு.க அரசு முந்தைய அ.தி.மு.க அரசின் மேல் பழி போடுவது போன்றும் தெரிகிறது.

Similar News