பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மரியாதை!
தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் பா.ஜ.க மாநில தலைவராக இருந்தவர் திரு.கே.என் லக்ஷ்மணன். இவர் சென்ற ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவுதினத்தை போற்றும் வகையில் கமலாலயத்தில் அவரது உருவ படத்திற்கு பா.ஜ.க வின் மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியை எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் இ.ல.கணேசன், மாநில பொது செயலாளர் மற்றும் புதிதாக நியமிக்கபட்ட அகில இந்தியா மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளர் வெள்ளூர் இப்ராஹிம் ஆகியோர் இதில் கலந்து கொண்டு கே.என் லட்சுமணனின் உருவ படத்திற்கு மரியாதையை செலுத்தினர்.