பொதுத்தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்க இயலவில்லையா? தடுமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ்?

Update: 2021-06-04 11:30 GMT

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். அனுபவமின்மை காரணமாக முடிவெடுக்க முடியாமல் அன்பில் மகேஷ் தடுமாறுகிறாரோ என தெரிகிறது. கொரோனோ இரண்டாம் அலை நாட்டில் உட்ச வேகத்தில் இருக்கும் சமயத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பது குறித்து முடிவெடுக்க கடந்த 2 வார காலமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொடர்ச்சியாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனோ முதல் அலை ஏற்பட்ட நேரத்தில் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன, கொரோனோ முதல் அலையை விட இரண்டாம் அலையில் கொரோனோ'வின் தாக்கம் அதிக அளவில் இருப்பதுடன் அதிக உயிர்பலியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுடன் உயிருடன் விளையாடாதவாறு தேர்வுகளை ஒத்தி வைப்பது சிறந்த முடிவாக இருக்கும் என கருதப்படும் நிலையில் இந்த முடிவை எடுக்க இரண்டு வார காலமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவது அனுபவமின்மையை வெளிக்காட்டுவது போல் உள்ளது.

இந்ந நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும், பின் கல்வியாளர்களுடனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டு நாளை பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News