முந்தி அடித்துக் கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு..! வணிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு?

Update: 2021-06-05 04:00 GMT

திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் எனவும் அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா நேற்று கூறியுள்ளார். முதல்வரின் அறிவிப்பு இன்னும் வெளியாகத நிலையில் இவர் முந்திக்கொண்டு அறிக்கை வெளியிடுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனோ இரண்டாம் பரவல் ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் தமிழகத்தின் கொரோனோ தினசரி பாதிப்பு இன்னும் 20 ஆயிரத்திற்கும் குறையவில்லை. இந்த நிலையில் இன்றோ இல்லை நாளையோ தமிழக அரசு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நேற்று வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின் கூறியதாவது, "அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என நினைத்தாலும் கொரோனா காரணமாக, தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளுடனும் தொற்று குறைவான இடங்களில் சில தளர்வுகளுடனும் கடைகளை திறக்க நேற்று கோரிக்கை வைத்ததாகவும் அதுகுறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், "வரும் 7 ஆம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் எனவும் அது குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும்" எனவும் கூறினார். கொரோனோ ஊரடங்கு வணிகர்களை மட்டும் வைத்து எடுக்கப்படும் முடிவல்ல, சுகாதாரத்துறை, தினமும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம், குணமடைந்தோர் விகிதம், படுக்கைகள் மற்றும் பிராணவாயு கையிருப்பு, மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலை என இவையனைத்தும் கருத்தில் கொண்டே ஊரடங்கு அமல்படுத்துவது முடிவாகும். ஆனால் முதல்வர் கடைகளை திறப்பது பற்றி ஆலோசனை செய்து அறிவிக்கும் முன்னரே வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா "7'ம் தேதி முதல் கடைகள் கட்டுப்பாட்டுடன் திறக்கலாம்" என கூறியிருப்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வணிகர் சங்கங்கள் செயல்படுகிறதா அல்லது வணிகர் சங்கம் கட்டுப்பாட்டில் தமிழக அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News