'தமிழகத்திற்கு அதிகமாக தடுப்பூசி கொடுங்க' : மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை..!

Update: 2021-06-05 12:56 GMT

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்து வந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் கோவைக்கு மிகவும் குறைவான தடுப்பூசியே வழங்குகிறார் என்று கோயம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.


இதனால் அவர் நேரடியாக மத்திய அமைச்சர்  ஹர்ஷவர்தனிடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை வைத்து, தொகுதி மக்களுக்கு தேவையான தடுப்பூசியை அளிக்குமாறு  கோரிக்கை அளித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து அவரிடம் கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தில் "இந்த ஜூன் மாதத்தில்  தமிழகத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கிய உங்களுக்கு எனது நன்றிகள். தமிழகம் தொழில்துறை மாநிலமாக விளங்குவதால் இங்கு அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு அதிக தடுப்பூசி தேவை படுகிறது. தொழில் துறையில் இருக்கும் பலர் கொரோனாவால் பாதிக்க படுவதால் தமிழகத்தின் பொருளாதாராத்தை பாதித்துள்ளது. அதே போல் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உடனடியாக Liposomal Amphotericin B மருந்து தமிழகத்திற்கு தேவை படுகிறது.

எனவே தாங்கள் தமிழகத்திற்கு 18-45 வயதிற்கான கொரோனா தடுப்பூசியும், கருப்பு பூஞ்சை நோயிற்கான Liposomal Amphotericin B மருந்தை அதிக அளவிற்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கிறேன்." என்று வானதி ஸ்ரீனிவாசன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News