'கோவை தொழில் நிறுவனங்களுக்கு உதவுங்கள்' : மத்திய அமைச்சர்களிடம் நேரில் மனு அளித்த வானதி சீனிவாசன்..!

Update: 2021-06-08 15:26 GMT

கோயம்பத்தூரில் கொரோனா நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்து உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் இது குறித்து கோரிக்கை வைத்தார்.


கோவை தொழில் அமைப்புகள் இந்த கொரோனா இரண்டாவது அலையால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கோவை சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவாக வழங்கினர். இன்று மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் கோவை தொழில் அமைப்புகளின் கோரிக்கையை அவர்களிடம் வழங்கினார்.

இதனை பெற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன் தகுந்த நடவடிக்கை விரைந்து எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதே போல மத்திய போக்குவரத்து மற்றும் சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வானதி சீனிவாசன் மனுவை அளித்துள்ளார்.

இந்த சந்திப்பை தனது அதிகாரபூர்வ  ட்விட்டெர் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News