தொழிலாளர் சங்க மனுக்களை மத்திய அமைச்சர்களிடம் வழங்கி கோரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்!

Update: 2021-06-09 05:21 GMT

கொரோனா இரண்டாவது அலையின் தொற்று அதிகமாக உள்ள நிலையில் கோவையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர், இதனால் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வானதி சீனிவாசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  நேற்று வானதி ஸ்ரீனிவாசன் இந்த கோரிக்கை மனுவை மத்திய நிதி அமைச்சர் மற்றும் சிறு, குறு தொழில் அமைச்சரை நேரில் சந்தித்து அவர்களிடம் அளித்தார்.


இதனை தொடர்ந்து, இன்று மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரை வானதி சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்பொழுது கோவை தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மனுவை சந்தோஷ் கங்வாரிடம் வழங்கினார். அதன் பின்பு, திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியை விரைவுபடுத்தவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கோவையில் உதவி மையம் அமைத்து தர வேண்டியும் அமைச்சாரிடம்  கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் உடனான சந்திப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News