பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
ஜூன் 7-ஆம் தேதி நாட்டு மக்களிடம் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் நாட்டு மக்களுக்கு மத்திய அரசே இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் மற்றும் நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது "கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும்,கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்." என்று அந்த ட்வீட்டில் அவர் கூறினார்.