"நகைக்கடன் தள்ளுபடி எப்போது?" - தி.மு.க அமைச்சர் விளக்கம்!

Update: 2021-06-10 07:00 GMT

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி எப்பொழுது என்பது பற்றி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பதிலளிக்கையில், "பொதுமக்களுக்குக் கொரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு போன்றவற்றை தடையின்றி விரைவாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.

மேலும் அவர், "கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். என்றாலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்" என்றார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நகைக்கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு காலதாமதம் ஏற்படுவதால் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Similar News