ஜிதின் பிரசாதா பா.ஜ.க-வில் இணைந்ததை அடுத்து அமித்ஷாவை நேரில் சந்தித்த யோகி ஆதித்யநாத்.!
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், நேற்று காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க வில் தன்னை இணைத்து கொண்டார். இவ்வாறு இருக்கையில் இன்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள யோகி ஆதித்யநாத் இன்று மாலை அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களது ட்விட்டர் பதிவில் பதிவிட்டனர். இதனை அடுத்து நாளை பாரத பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
आज आदरणीय केंद्रीय गृह मंत्री श्री @AmitShah जी से नई दिल्ली में शिष्टाचार भेंट कर उनका मार्गदर्शन प्राप्त किया।
— Yogi Adityanath (@myogiadityanath) June 10, 2021
भेंट हेतु अपना बहुमूल्य समय प्रदान करने के लिए आदरणीय गृह मंत्री जी का हार्दिक आभार। pic.twitter.com/1q1qYnrYq7
ஜிதின் பிரசாதா பா.ஜ.க-வில் இணைந்ததை அடுத்து யோகி ஆதித்யநாத் அமித்ஷாவை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.