சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் : ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு!

Update: 2021-06-11 11:06 GMT
சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப்  கார் : ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு!

சமீபத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் வடபழனி முருகன் கோவில் மற்றும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் இருக்கும் அத்துமீறலை அகற்றி மீட்டுகொடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தார்.


இந்த கோயிலில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரோப் கார் அமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் சேகர் பாபு மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அதை பார்வையிட்டனர்.

இது குறித்து சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது "சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தாமதமாக நடைப்பெற்று வந்த நிலையில், அப்பணிகளை இன்று பார்வையிட்டு ஒரு சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் வகையில் ஆய்வு மேற்கொண்டோம். உடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News