மத்திய அரசை 'பாரத பேரரசு' என்று அழைப்போம் : குஷ்பூ அதிரடி!

Update: 2021-06-11 13:55 GMT

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த சில தினங்களுக்குள் இந்திய நாட்டு மக்களிடையே பிரிவினைவாதம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் பொறுபேற்றதுடன் அவரது அனைத்து அறிவிப்புகள் மற்றும் அறிக்கையில் மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று குறிப்பிடுகிறார். இதை தொடர்ந்து தி.மு.க-வில் உள்ள பல அமைச்சர்களும், பிரமுகர்களும் ஒன்றிய அரசு என்று  கூறி வருவதோடு அல்லாமல் "சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது" என்று ஆதாரம் இல்லாமல் பேசுகின்றனர்.


அதே நேரத்தில் வேண்டுமென்றே இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்நோக்கத்தோடு தி.மு.க இவ்வாறு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என்று பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள், மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள் தான். துரதிஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இப்படி அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் "பாரத பேரரசு" என்று அழைப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News