பாரத பேரரசின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுபேற்றார். அவர் பொறுபேற்ற சமயத்தில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது, எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சிறிது குறைந்த நிலையில் ஸ்டாலின் வரும் ஜூன் 17-ஆம் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ஜூன் 16 அன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அன்று இரவு அவர் டெல்லியில் தங்குகிறார். மறுநாள் காலை 10:30 மணிக்கு, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக 35 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு முடிந்த பின், ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களை மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.