"இரட்டை வேட தி.மு.க" - டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க-வை விளாசும் எல்.முருகன்!

Update: 2021-06-14 02:15 GMT

"தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை" என தி.மு.க'வின் இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பா.ஜ.க இந்த அறிவிப்பு வெளியான சமயம் முதலே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழகம் முழுவதும் பா.ஜ.க'வினர் கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் கூறியதாவது, "டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என விமர்சனம் செய்துள்ளார். ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை என முதல்வர் செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல் விலையை குறைக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன?" எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News