பா.ஜ.க-வில் இணைந்த முக்கிய தலைவர் - கர்நாடகா, புதுச்சேரிக்கு பின் தெலூங்கானாவை கைபற்ற வியூகம்!

Update: 2021-06-14 11:46 GMT

தொடர்ந்து பா.ஜ.க-வில் பிற காட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணைந்து வரும் நிலையில். இன்று தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் எட்டலை ராஜேந்தர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடன் இருந்து அவர்களை பா.ஜ.க-விற்கு வரவேற்றார்.


இது குறித்து எட்டலை ராஜேந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் போது "இன்று நான் ஒரு புதிய பயணத்தை தொடங்கியுள்ளேன். என்னையும் எனது ஆதரவாளர்களையும் வரவேற்றதற்கு நான் பா.ஜ.க-விற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் தெலுங்கானா மற்றும் தெலுங்கலாவின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறேன். நான் இன்று முதல் என்றுமே மக்கள் மற்றும் கட்சியின் சேவையில் ஈடுபடுவேன்." என்று அவர் தெரிவித்தார்.


எட்டலை ராஜேந்தர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்த பின்பு பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நட்டாவை நேரில் சந்தித்தார். பின்பு நட்டா அவர்களுக்கு மலர் வளையம் கொடுத்து பா.ஜ.க கட்சிக்கு வரவேற்றார்.

Tags:    

Similar News