தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்று அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து தொகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு மிகவும் குறைவான தடுப்பூசி ஒதுக்கிய நிலையின் வானதி ஸ்ரீனிவாசன் நேரடியாக மத்திய சுகாதார அமைச்சரிடம் தடுப்பூசி கேட்டுபெற்று அந்த தொகுதி மக்களுக்கு வழங்கினார். இவ்வாறு இருக்கையில் இன்று கோவையில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைத்தார்.
இன்று காலை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கு இருந்த பெரியவர்களிடம் ஆசி பெற்றார். அதன் பிறகு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தார்.
அந்த முகாமில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் விளையாட்டு வீரர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மற்றும் அங்கு இருந்த மருத்துவர்களின் செயல்பாடு குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பார்வையிட்டார்.