"மின் கட்டண கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது" - மின்வெட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி!

Update: 2021-06-15 06:15 GMT

"தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது" என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைவிரித்துள்ளார்.

கொரோனோ இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் ஊரடங்கில் இருந்து வருகிறது. காய்கறி, மளிகை என அத்தியாவசிய பொருள்கள் மட்டும் நேர வரம்பின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு அலுவலர்களுக்கு மட்டுமே விடுமுறையாக இருந்தாலும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் செய்வோர் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் கொரோனோ தொற்றுக்கு பயந்து வீட்டின் உள்ளேயே அடைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ அரசு மின் கட்டணத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கமுடியாது என அறிவித்துள்ளது.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஏற்கனவே போதுமான அளவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும்" அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் வருமானமின்றி தவிக்கும் மக்கள், மறுபுறம் சொற்ப வருமானத்தையும் டாஸ்மாக் கடையில் இழந்து நிற்கும் மக்கள் என தமிழகம் அவஸ்த்தை பட்டு வரும் நிலையில் மின்வாரிய துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Similar News