சிறு, குறு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி!

Update: 2021-06-17 12:33 GMT

இந்த கொரோனா இரண்டாவது அலையில் கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்படுத்து வந்தனர். கோயம்பத்தூர் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர்களிடம் வழங்கினார். இந்த நிலையில் இன்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமை வானதி சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ளார்.


இது குறித்து அவர் கூறும்போது " இன்று சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கோவை நாகசாய் அறக்கட்டளை மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தேன். இதில் கோவையை சேர்ந்த  தொழிலாளர்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்." இந்த தடுப்பூசி முகாமை நேரில் சென்று வானதி ஸ்ரீனிவாசன் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை கோவையில் வானதி ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். அது மட்டுமின்றி இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இதற்கான பயிற்சி புத்தகங்களை அவர்களுக்கு வழங்கினார். மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள "ps.stepstosuccess@gmail.com" என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம் என்று கூறினார்.

Tags:    

Similar News