புது டெல்லியில் நிறைவடைந்தத 'வலியுறுத்தல்' சந்திப்பு!

Update: 2021-06-17 12:30 GMT

இன்றைய பிரமதர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது.

சந்திப்புக்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக பிரதமர் எனக்கு வாழ்த்துச் சொன்னார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் உறுதியளித்தார்.

கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமரிடம் கோரிக்கை.

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை, புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.

புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தல்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தல்" என இன்றைய வலியுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

Similar News