நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க பல்டி : தேர்வுக்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை!

Update: 2021-06-18 12:15 GMT

நீட் விவகாரத்தில் தேர்தல் வாக்குறுதியில் அளித்தது ஒன்று ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவது ஒன்று என தி.மு.க அந்தர் பல்டி அடிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அரசுப் பள்ளிகள் மூலம் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என ஓ.பி.எஸ் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

தனியார் நீட் பயிற்சி மையங்களின் கட்டண குறைப்பு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க'வினர் கூறியதாவது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் கையெழுத்திடுவது நீட் தேர்வு விலக்கு" என்றே பிரச்சாரம் செய்தனர். ஆனால் தற்பொழுது அந்தர் பல்டி அடிக்கும் விதமாக அமைச்சர் கூறியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Similar News