'வரி தற்போதைக்கு குறைக்க வாய்ப்பில்லை' - தமிழக மக்களை ஏமாற்றும் பி.டி.ஆர்?
தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் விலை குறைக்கப்படும் என பொய் அறிக்கையை பிரச்சாரம் செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "பலர் கேட்கின்றனர் எப்போது பெட்ரோல், டீசல் வரியை குறைப்பீர்கள் என்று? ஆனால் வரி தற்போதைக்கு குறைக்க வாய்ப்பில்லை..!" என தெரிவித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த சாமானிய மக்கள் முதல் வியாபாரிகள் வரை பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்க இயலாது தி.மு.க ஆட்சி கைவிரித்துள்ள நிலையில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.