'மத்திய அரசு நிலுவை தொகை குடுத்தால் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்' - தயாநிதி மாறன் எம்.பி!

Update: 2021-06-21 08:30 GMT

"மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை தொகையினை தர மறுப்பதாகவும் அதையும் நிச்சயமாக மீட்டெடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யபடும்" என எம்.பி தயாநித மாறன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மேகதாது குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஏற்கனவே அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிராக ஒவ்வொருமுறையும் செயல்படுவதாகவும், நிச்சயமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுப்பர்" என்றார்.

மேலும் பேசிய அவர், "10 ஆண்டுகளாக பொதுமக்களின் வரிப் பணத்தை சுரண்டி கஜானாவை காலி செய்து கிட்டத்தட்ட 60 லட்சம் கோடி ரூபாய் வரை கடன்களை அ.தி.மு.க அரசு விட்டு சென்றுள்ளதாகவும், ஆனால் தி.மு.க சொன்னதுபோல் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் 14 வகையான சிறப்பு தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி உள்ளதாகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்" அவர் கூறினார். மேலும், "மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை தொகையினை தர மறுப்பதாகவும் அதையும் நிச்சயமாக மீட்டெடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யபடும்" என்றார்.

Similar News