'தேர்தல் சமயத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு' - ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

Update: 2021-06-21 09:30 GMT

"தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய தி.மு.க நிலைமையாக உள்ளது" என முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தி.மு.க ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்க பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும் நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு, இப்போது குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு,தேர்வு வந்ததற்கு பின்பு ஒரு பேச்சினை பேசி வருகின்றனர். தி.மு.க ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து பத்திரம் வழங்க பட வில்லை, மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர், அது குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என வாக்குறுதி கொடுத்து அறிவிப்பு விடுத்தனர், அந்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை" என கூறினார்.

Similar News