வேளாண் ம சோதாவைதிரும்ப பெற வலியுறுத்தி மசோதா - மக்களை திசை திருப்புகிறதா தி.மு.க?

Update: 2021-06-23 01:15 GMT

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மின்வெட்டு, பெட்ரோல் டீசல் விலை போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவோ இது என தெரிகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, மானாமதுரை தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசி, மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை எடுத்துவைத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ தமிழரசி மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்" என்றார் அவர்.

Similar News