வேலை வாங்கி தருவதாக செய்த மோசடியில் பதவியை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்ப முயற்சிக்கிறாரா செந்தில் பாலாஜி?

Update: 2021-06-24 08:00 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த பொழுது மக்களிடம் வேலை வாங்கி தருவதாக கோடிகளில் பணம் சுருட்டி அதனை திருப்பி தராமல் கையாடல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவ தாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 15-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட் டுள்ளது. மேலும் அவர் மீது

தற்போதைய மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, 2011 2016 காலகட்டத்தில், அ.தி.மு.க அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் வேண்டி போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு குடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த வேலை தேடும் படித்த இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையில் போக்குவரத்து துறையில் வேலை வேண்டுமானால் அமைச்சருக்கு பணம் தரவேண்டும் என ஒருபுறம் மோசடி நடைபெற்றது. ஓட்டுநர் பணிக்கு 5 லட்சமும், நடத்துனர் பணிக்கு 7 லட்சமும், இளநிலை உதவியாளர் பணிக்கு 11 லட்சமும் பணம் தந்தால் பதவி என தமிழகத்தில் பணி வேண்டிய விண்ணப்பித்தவர்களிடையே பணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் கூறியபடி பணி நியமன ஆணையும் வரவில்லை, பணமும் திரும்ப வரவில்லை. இதனால் விரக்கியடைந்த அம்பத்தூரைச் சேர்ந்த சுணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 81 நபர்களிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த சுணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உள்பட நான்குபேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகள், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்துள்ள னர்.

இந்த வழக்கில், குற்றப் பத்திரிகை வழங்குவது தொடர்பாக நீதிமன் றத்தில் ஆஜராகுமாறு ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.ஆலிசியா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை நடைபெற்று வருவதால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதி. ஜூலை 15-ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள பொழுதே மேலும் இதே மோசடியில் இன்னும் இரண்டு புதிய வழக்குகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ளது. தற்பொழுது ஆளும்கட்சி அமைச்சராக இருப்பதால் சட்டப்பேரவை கூட்டத்தொடர், கொரோனோ போன்ற காரணங்களை காட்டி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடித்து வருகிறார். ஆனால் பணத்தை பறிகொடுத்தோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துவிட்டு நீதி கிடைக்கும் என காத்திருக்கின்றனர். செந்தில் பாலாஜியோ அமைச்சராக காரில் முன்விளக்கு சுழல பவனி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News