காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Update: 2021-06-24 12:31 GMT

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை (Article 370) மத்திய அரசு நீக்கி லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர் இன்று முதல் முறையாக பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


ஜம்மு - காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், டில்லி லோன் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.


குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மக்கள் மாநாட்டு கட்சியின் சஜத் லோனே, ஜம்மு - காஷ்மீர் அப்னே கட்சியின் சையத் அல்டாப் புகாரி, ஜம்மு காஷ்மீர் பேந்தர்ஸ் கட்சி தலைவர் பேராசிரியர் பீம் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்ததை அடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் குறித்து பேசியிருக்க கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News