வாக்குறுதிகள் எங்கே என கேட்கும் எதிர்கட்சிகளை மடைமாற்ற 'ஒன்றிய அரசு' என வார்த்தை விளையாட்டு விளையாடும் தி.மு.க அரசு?

Update: 2021-06-26 10:15 GMT

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பில் அமர்ந்து 50 நாட்கள் நெருங்க போகிறது. சரியாக 128 பக்கங்களை கொண்ட 505 வாக்குறுதிகளை அளித்துவிட்டுதான் மக்களிடம் வாக்குகளை பெற்று தி.மு.க ஆட்சியை பிடித்தது. 60 மாதங்கள் ஆட்சியில் இருக்கப்போகும் தி.மு.க தனது வாக்குறுதிகளில் சராசரியாக மாதம் 8 வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களுக்கு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இதனை கருத்தில் கொள்ளாமல், செயல்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் 'மத்திய' அரசை 'ஒன்றிய' அரசு என கூறுவதில் முனைப்பும், ஆர்வமும் காட்டி வருகிறது.

தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானவை,

1) அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.

2) சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

3) மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

4) நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

5) 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.

6) 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.

7) நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.

8) ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

9) கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10) மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இப்படியாக மக்கள் நேரடியாக பயன்பெறக்கூடிய வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் 'ஒன்றிய' அரசு என வார்த்தைகளில் விளையாட்டு காட்டுகிறது. ஒருவேளை வாக்குறுதிகளை மறக்கடிக்க 'ஒன்றிய அரசு' விளையாட்டு பயன்தருகிறதோ தி.மு.க'விற்கு?

Similar News