அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் திறப்பு விழா பூஜையை புறக்கணித்தாரா முதல்வர் ஸ்டாலின்?

Update: 2021-07-02 11:00 GMT

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்துக் கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். இதனை முன்னிட்டு சில நாட்கள் முன்பு முதல்வரை சந்தித்த நடிகர் அர்ஜுன் ஆஞ்சநேயர் கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று அர்ஜுனுக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள கெருகம்பாக்கம் தோட்டத்தில் கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு கோவிலை நிறுவி அதன் திறப்புவிழா பூஜையை நேற்று செய்து ஆகம விதிகளின்படி கோவிலை திறந்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா, அதை மறுத்தாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

Similar News