'போதும் சூர்யா இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்' - அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றிய பா.ஜ.க இளைஞரணி!
நடிகர் சூர்யா தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த கல்வி கொள்கை, நீட் தேர்வு, மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த முறைகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக பா.ஜ.க இளைஞரணி தீர்மானம் இயற்றியுள்ளது.
நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, என தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மேலும் பா.ஜ.க'வை சார்ந்தவர்கள், பா.ஜ.க'வின் செய்தி தொடர்பாளர்கள் இது பற்றி விளக்கம் அளித்தாலும் சூர்யா அதனை கேட்டு தெளிவதில்லை மாறாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்த வண்ணம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இதனைதொடர்ந்து பா.ஜ.க இளைஞரணி இவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் கூறுகையில், "மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்புகிறார் நடிகர் சூர்யா. மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளவேண்டும் இல்லை என்றால் அவர் மீது உரிய நடவடிக்க எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.