"காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி" - உயர் நீதிமன்றம் அதிரடி!

Update: 2021-07-06 01:17 GMT

 2015-ஆம் ஆண்டு விற்பனை செய்த நிலத்திற்காக பெற்ற ₹6.38 கோடி வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பியது.எனவே வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 


2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வருமான வரித்துறை நோட்டீசை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வருமான வரித்துறை கணக்குகளுக்கான மறுமதிப்பீடு தொடங்காத நிலையில், அந்த நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News