பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் பதவியா? கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்!

Update: 2021-07-08 05:14 GMT

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக பட்டிமன்ற ஆபாச பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நியமனத்தை மேற்கொண்ட தி.மு.க அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லியோனி பொது வெளியில் பல முறை பெண்களை கொச்சைப்படுத்தி கீழ்த்தரமான கருத்துக்களை பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது "தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்!"

இதையடுத்து லியோனி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Similar News