அதிகாரத்தை பயன்படுத்தி பிற கட்சி ஆட்களை முழு வீச்சில் இழுக்கும் தி.மு.க?

Update: 2021-07-09 09:00 GMT

பிற கட்சிகளில் உள்ள ஆட்களை முழு வீச்சில் இழுக்க துவங்கியுள்ளது தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கட்சியாக வறட்சியில் இருந்த பாடத்தை நன்கு படித்த தி.மு.க தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் பிற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து தி.மு.க'வை வலுப்படுத்தும் பணியை துவங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன், மதுழவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா என சிலரை தி.மு.க'வில் சேரும்படி அழைத்து இணைப்பு விழா நடத்தியிருக்கிறது

மேலும் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து, தற்போது அ.தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளராக இருக்கும் விஜிலா சத்யானந்த் அவர்களையும் தி.மு.க தன் பக்கம் இழுத்து இணைப்பு விழா நடத்தியுள்ளது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ரஜினி மக்கள் மன்றம், அ.தி.மு.க என பிற கட்சிகளில் இருந்து கடந்த மூன்று மாதத்தில் அனேக பேரை இழுத்து தி.மு.க-வின் பக்கம் சேர்த்துள்ளது தி.மு.க தரப்பு. இப்படியாக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பிற கட்சிகளின் ஆட்களை தன் பக்கம் முழு வீச்சில் இழுக்கதுவங்கியுள்ளது தி.மு.க.

Similar News