எதிர்பாராத ட்விஸ்ட் : ஆபாச பேச்சு புகழ் லியோனியின் பதவியேற்பு நடைபெறுமா?
தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி, நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக, தி.மு.க கொள்கை பரப்பு செயலர் லியோனியை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்கும் முன், அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு, பள்ளி கல்வி பதவியா' என, எதிர்ப்புகள் எழுந்தன. லியோனி-யின் பெண்கள் பற்றிய இழிவான பேச்சுக்கள் கொண்ட விடியோ'க்கள் சமூக வலைதளத்தில் அதிகம் வலம் வந்தன.
இந்நிலையில் நேற்று அமாவாசை நாள் என்பதால், காலை பதவியேற்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு, பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. வராததற்கான காரணமும், பாடநுால் கழகத்துக்கு, லியோனி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
எதிர்ப்புகள் அதிகம் கிளம்பிய நிலையில் லியோனி'யின் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளதா தி.மு.க என விளக்கம் கேட்டு கேள்வி எழுந்துள்ளது.