பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்றார் ஆபாச பேச்சாளர் லியோனி - மாணவர்களின் பெற்றோர்கள் கவலை!

Update: 2021-07-13 02:15 GMT

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து தமிழக மாணவர்களின் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஆட்சி அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். பட்டிமன்றங்களில் மக்களிடம் கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு ஆசிரியர் என்பதை மறந்து மூன்றாம் தரமாக, ஆபாசமாக பேசி வரும் லியோனியை இந்த பதவில் அமர்த்தியதற்கு எதிர்கட்சிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்கட்சிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் எதிர்ப்பை துட்சமென மதித்து தி.மு.க அரசின் ஆணைப்படி நேற்று காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆசிரியர் என்பதை மறந்து கைதட்டலுக்காக பொதுக்கூட்டங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நபரை பாடநூல் கழக தலைவராக எப்படி நியமிக்கலாம் என மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளனர்.

Similar News