"சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு பிணை தாருங்கள்" என திருமாவளவன் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை வழங்கவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை மேலும் காலந்தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
உச்ச நீதிமன்றம் 07.05.2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள கைதிகள் நூற்றுக் கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படடுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், உயர் அதிகாரக் குழு பரிந்துரைத்தும் கைதிகளுக்குப் பிணை வழங்காதது ஏன் என்பது புரியவில்லை. இனியும் இதில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக தகுதியான கைதிகளுக்குப் பிணை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது" என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு கொரோனோ பரவலை தடுக்க பிராசை பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சிறையில் பல குற்றங்களை புரிந்த குற்றவாளிகளுக்கு திருமாவளவன் ஏன் பிணை கேட்கிறார், யாருக்காக பிணை கேட்கிறார் என புரியாத புதிராக உள்ளது.