அண்ணாமலை பதவியேற்ற பின்பு தி.மு.க-விலிருந்து முதல் குரல்? பயத்தில் ஆளும்கட்சி?

Update: 2021-07-18 11:30 GMT

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதற்கு தி.மு.க-வில் இருந்து முதல் குரல் எழுந்துள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொற்றுபேற்றதற்கு பிறகு இனி தமிழக அரசியல் களம் தி.மு.க மற்றும் பா.ஜ.க என்பது போல் மாறிவிடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதனைதொடர்ந்து தி.மு.க-வில் இருந்து அண்ணாமலை பற்றி ஏதும் பேசக்கூடாது என வாய்மொழி உத்தரவு வந்ததாக தெரிகிறது. ஆனால் அதையும் மீறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாய் திறந்துள்ளார்.


திருச்செந்தூர் கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது "திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை" என அன்னாமலை கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, "சில நேரத்தில் ஒரு சிலரைப் பற்றிக் கூறினால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும்" என்றார் பதட்டமாக.

Similar News