மேகதாது விஷயத்தில் மோடி அவ்வாறு செய்யமாட்டார் என பல்டி அடித்துள்ளார் திருமாவளவன்.
மதுரையில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு சந்தித்தது.
தமிழக தரப்பு தெரிவித்த கருத்துக்களை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். எனவே, தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படாது என்று நம்புகிறோம்" என்றார் அவர்.