"பீகாரிகளுக்கு சிறிய மூளை!" கே.என் நேரு பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Update: 2021-07-27 02:12 GMT

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. சார்பில் 'திசை காட்டும் திருச்சி' என்ற பெயரில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை துவக்கி வைப்பதற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அங்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.   


"பீஹார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மியாக இருக்கும். ஆனால், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 4,000-க்கும் மேற்பட்ட பீஹார்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பராக அவர்களை பார்க்கலாம், இதற்கு காரணம், அப்போது ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தான். அவர்களுடைய ஊர்க்காரர்களை எல்லாம் தேர்வில் பிட் அடித்து தேர்ச்சி பெற வைத்து ரயில்வே துறையில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

மத்திய அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற நாம் முயலவில்லை. வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் பிற மாநில மக்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், கேரளாவிற்கு அடுத்தபடியாக, தமிழக இளைஞர்கள் அதிக புத்திசாலித்தனம் மிக்கவர்கள். எனவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும்.


தமிழகத்தில், 80 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனவே, இதுபோன்ற பயிற்சி முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்." என்று நேரு பேசினார். மேலும் இவர் பீகார் மக்களுக்கு மூளை கம்மியாக இருக்கும் என்று பேசியது அந்த மாநில மக்களிடையே பெரும் சர்ச்சையாகி உள்ளது. அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பீகார் மாநில மக்கள் நேருவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News