கிருஸ்துவமும், இந்து மத வெறுப்பும் இணையும் தமிழக பாடநூல் கழகம் - மாணவர்களின் எதிர்காலம் என்ன?
தி.மு.க ஆட்சியில் தொடர் நடவடிக்கைகளால் கிருஸ்துவ மயமாகிறதா தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலினால் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். இவர் ஆசிரியராகவே இருந்தாலும் தி.மு.க பேச்சாளராக, பட்டிமன்றத்தில் கைதட்டல் வாங்குவதற்காக ஆபாசமாக பேசும் பேச்சாளராக வலம் வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகழ்பாடியே தி.மு.க-வில் தனக்கென ஒர் இடத்தை பிடித்தார். பட்டிமன்றங்களில் மக்கள் மத்தியில் கைதட்டல் வாங்குவதற்காகவே பெண்கள் இருக்கிறார்கள் என்றும் கூட பாராமல் முதலிரவு போன்ற சம்பவங்களை உவமைப்படுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசுவார். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரச்சாரம் செய்கிறோம் என்பதை கூட மறந்து பெண்களின் இடுப்பை பற்றி திறந்தவெளி வாகனத்தில் நிற்றுகொண்டு பேசி அங்கிருந்த பெண்களை முகம் சுழிக்க வைத்தார். இவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமித்தார்.
இவர் பொறுப்பேற்றவுடன் பாட புத்தகங்களில் மத்திய அரசு என்று இருப்பது வரும் காலங்களில் ஒன்றிய அரசு என மாற்றி அச்சிடப்படும் என தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராகவே பதவியில் இருந்துகொண்டு பேசினார்.
இதனையடுத்து பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக மேடைக்கு மேடை கடவுள் மறுப்பை அதிலும் குறிப்பாக இந்து கடவுள் மறுப்பை பேசி வரும் திராவிடர் கழக சுப.வீரபாண்டியனை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் கிருஸ்தவ மதத்தை சேர்ந்த பட்டிமன்ற ஆபாச பேச்சாளர் ஐ.லியோனி, மறுபுறம் இந்து மத கடவுள்களை மட்டுமே விமர்சிப்பதை வாழ்நாள் பிழைப்பாக கொண்ட சுப.வீரபாண்டியன் என தமிழக இளம் தலைமுறையினர் படிக்கும் பாடநூல் கழகத்தில் திட்டமிட்டு இவர்களை இருவரையும் தி.மு.க பணியில் அமர்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.