#சொன்னீங்களே_செஞ்சீங்களா? தி.மு.க-வை எதிர்த்து களத்தில் இறங்கிய அ.தி.மு.க!

Update: 2021-07-28 06:52 GMT

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தேர்தல் சமயத்தில் தி.மு.க கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது, அதில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்டவை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றபடும் என்று தெரிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து  இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை தி.மு.க அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற படவில்லை. இதனை கண்டித்து அ.தி.மு.க கட்சி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டு வருகிறது.


நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக பதாதைகளை ஏந்தி அ.தி.மு.க வின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க வின் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு  ட்விட்டரில் "திமுக சொன்னேங்களே செஞ்சீங்களா" என்ற ஹாஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் "தி.மு.க கட்சி சார்பில் 505 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதியில்  அவர்கள் கூறிய முக்கியமான சில விஷயங்களை கூட தி.மு.க நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகின்றனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. ஸ்டாலின் முதல்வர் ஆனதும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார் ஆனால்,தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளனர்.

அதேபோல், கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவான வங்கி நகைக்கடனை தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் போன்ற பல வாக்குறுதிகளை தி.மு.க அளித்தது. ஆனால், இதுவரை அது சம்பந்தமாக ஒரு அறிவிப்பு கூட வரவில்லை. தி.மு.க வின் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைத்திருப்ப அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர் மற்றும் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர்." என்று  அவர் பேசினார்.

Tags:    

Similar News