அதிகப்பிரசங்கி அமைச்சருக்கு அமைச்சரவையில் இருந்து விரைவில் கல்தா - யோசனையில் ஸ்டாலின் !

Update: 2021-09-26 08:00 GMT

தமிழக அமைச்சரவையில் யாரையும் மதிக்காத அதிகப்பிரசங்கியாக பேசி வரும் அமைச்சருக்கு விரைவில் தி.மு.க கல்தா குடுத்து அமைச்சரவையை விட்டு விலக்கி வைக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தயில் எழுந்துள்ளது. மேலும் எதிர்கட்சிகளும் தி.மு.க'வை விமர்சித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளது, இதற்கெல்லாம் மேலாக அயல்நாட்டில் படித்தேன், எனது பரம்பரை பெரும் பரம்பரை என பெருமை பேசி சுற்றும் அதிகப்பிரசங்கி அமைச்சரின் திமிர் பேச்சுக்கள் வேறு முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது தி.மு.க அமைச்சரவையிலும் அந்த அதிகப்பிரசங்கி அமைச்சருக்கு ஆதரவு இல்லையாம், சில முக்கிய மூத்த தி.மு.க அமைச்சர்கள் கூட சமீபத்தில் ஸ்டாலின் அவர்களிடம் "இவரால் நமக்கு இன்னும் கெட்ட பெயர்தான் அதிகமாகுமே தவிர நல்ல பெயர் கிடைக்கப்போவதில்லை" என கூறியது வேறு ஸ்டாலினை அதிக யோசனையில் வைத்துள்ளது. எனவை மதுரையை சேர்ந்த அதிகப்பிரசங்கி அமைச்சருக்கு விரைவில் அமைச்சரவையில் இருந்நு கல்தா குடுக்கலாம் என தி.மு.க'வினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.


Source - One india tamil

Similar News