ஸ்டாலின் முதல்வரானதற்கு திருச்செந்தூரில் வேண்டுதலை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலின் !
முதல் அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார்.
பேட்டரி கார் மூலம் கோவில் முகப்புக்கு சென்ற அவர் திருச்செந்தூர் கடலில் கால் நனைத்து விட்டு தரிசனம் செய்தார். அங்கு சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து துர்கா ஸ்டாலின் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.