பள்ளி கல்விதுறையின் அந்தர் பல்டி அறிவிப்புகள் - தடுமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Update: 2021-10-25 10:00 GMT

தமிழக அரசு 1 முதல் 8'ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்கற் முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என அறிவித்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி நிர்வாகமும் மனதளவில் தயாராகினர். தமிழகத்தில் சில பள்ளிகளில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி பள்ளிகள் திறப்பு பற்றிய ஆலோசனை நடைபெற்றது. அதில் பலர் அடுத்த 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இப்படி பள்ளி கல்வித்துறை யோசனை இல்லாமல் 1'ம் தேதி பள்ளி திறப்பதை ஏன் முடிவு செய்தார்கள் என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் 1'ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புக்கு வர வேண்டியதில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு ஏன் பள்ளி திறக்க வேண்டும் என்ற கேள்வியும் பல பள்ளி நிர்வாகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "நவம்பர் 1'ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம்" என அறிவித்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்ப மனநிலையே நிலவுகிறது.


Source - Maalai malar

Tags:    

Similar News