நீட் தேர்வில் வென்ற மலைவாழ் மாணவி - நீட் பற்றிய பொய் பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கினார் !
தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் நீட் தேர்வை தவறாக பிரச்சாரம் மூலம் அம்பலப்படுத்தி வரும் வேளையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, நீட் தேர்வு கொடியது, நீட் தேர்வை நம் மாணவர்களால் எதிர்கொள்ள இயலாது என பொய்பிரச்சாரங்களை தமிழக பிரதான கட்சிகள் முன்னெடுத்து வரும் வேளையில் சத்தமில்லாமல் பழங்குடி மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
நீட் தேர்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி, மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி தனது விடாமுயற்சியால் வறுமையை வென்று சாதித்துள்ளார்.
நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார். தற்போது 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் நிச்சயம் இவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து விடும்.
இது குறித்து பெருமை பொங்க மாணவி சங்கவி கூறிய வார்த்தைகள், "எனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்தது. இதன் காரணமாக குடும்ப கஷ்டத்தையும் உணர்ந்து உத்வேகத்துடன் படித்தேன். 10-ம் வகுப்பு வரை குமிதிபதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 11 மற்றும் 12-ம் வகுப்புகள் பிச்சானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ்-2 தேர்வில் 925 மதிப்பெண்கள் பெற்றேன்.