ஜெயலலிதா புகைப்படம் அருகில் கருணாநிதி புகைப்படம் - அம்மா உணவகத்திலும் தி.மு.க'வின் ஸ்டிக்கர் கைவரிசை !

Update: 2021-11-20 11:45 GMT

மதுரையில் அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் படத்தை தி.மு.க'வினர் சேர்த்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி சென்னையில் முதன் முறையாக மலிவு விலை அம்மா உணவகங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. இது வருமானம் குறைவான மக்களின் பணியை போக்கி பெரும் சேவையை புரிந்தன. இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகத்தில் கலவரம், சில இடங்களில் அம்மா உணவகம் சூறை என தி.மு.க'வின் வழக்கம்போல் செய்கைகள் தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு தி.மு.க பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தது குறிப்பிடதக்கது.


Source - Asianet NEWS

Similar News