அலைக்கழிக்கப்பட்ட தமிழக சீனியர் வீராங்கனைகள் - விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!

Update: 2021-11-21 07:30 GMT

தமிழக மகளிர் சீனியர் கால்பந்து அணிக்கான அங்கீகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிர் சீனியர் கால்பந்து போட்டியில் பங்குபெற்ற தமிழக அணி 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்தனர். இந்த வெற்றிக்கு பிறகு 4 ஆண்டுகளாக அரசின் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இத்தகவலை ABP Nadu பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்தார்.

இது மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவின் கவனத்திற்கு செல்ல அவரும் இதனை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அதன்படி அணிக்கு தற்பொழுது ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 1.38 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன் தமிழக அரசின் குரூப்-சி பணிகளில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

விரைந்து நடவடிக்கைகள் எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Tags:    

Similar News