"இம்ரான்கான் நமக்கு பிடித்த நபர்'தான்" - ஒப்புக்கொண்ட சித்து! கடுப்பில் காங்கிரஸ்

Update: 2021-11-21 08:30 GMT

"இம்ரான் கான் தனக்கு மிகவும் பிடித்தமான நபர். தனது மூத்த சகோதரர் போன்றவர்" என பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறயதாவது, "பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மேற்கொண்ட முயற்சியால்தான் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.

கர்தார்பூர் சென்ற சித்து, தன்னை வரவேற்ற பாகிஸ்தான் அதிகாரிகளிடம் "இம்ரான் கான் தனக்கு மிகவும் பிடித்தமான நபர். தனது மூத்த சகோதரர் போன்றவர்" என கூறிய பதிவுகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் பாக்கிஸ்தான் பிரதமரை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Source - maalai malar

Similar News